வணிகம்

எஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு

webteam

எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

கடந்த வாரம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதாவது 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் பெரிய வங்கியான எஸ்பிஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது குறைத்துள்ளது. 

அதாவது அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. அதன்படி கடன் வட்டி விகிதம் 8.55 % இருந்தது 8.50% குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல எஸ்பிஐ வங்கி ரூ.30 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கான வட்டி 8.60%-8.90% யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கடன் வட்டி விகித குறைப்புகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கனெவே கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 6.25 சதவிகிதமாக குறைத்த போது எஸ்பிஐ வங்கி ரூ.30 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு 0.05 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.