வணிகம்

என்ன செய்யப் போகிறார்களோ எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்?

webteam

எஸ்பிஐ வாடிக்கையாளர் அந்த வங்கி ஏடிஎம்மில் தனது கணக்கில் உள்ள தொகையைவிடக் கூடுதலாக பணம் எடுக்க முயன்றால், 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர் அந்த வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 4 முறை மட்டுமே கட்டணம் எதுவுமில்லாமல் பணம் எடுக்கலாம். அதற்கு மேல் அவர் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் 10 ரூபாய் கட்டணம் சேவை வரி ரூ.3 என மொத்தம் 13 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் தனது கணக்கில் உள்ள தொகையைவிடக் கூடுதலாக பணம் எடுக்க முயன்றால், 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சொந்த ஏடிஎம்களில் எடுப்பதற்கு இந்தக் கட்டணங்கள்.

பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கட்டணம் ரூ.20 என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவை வரி வேறு இருக்குமாம். அதையும் சேர்த்தால் 26 ரூபாயாக இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் மெய்ட்டன் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டிருந்தது. தற்போதைய இந்த அதிரடி அறிவிப்புகளால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.