வணிகம்

ஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விற்பனை விலை உயர்வு! இந்தியா முடிவு காரணமா?

EllusamyKarthik

ஆசிய கண்டத்திற்கான கச்சா எண்ணெய் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான Saudi Aramco. சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை குறைக்கும் நோக்கில் இந்தியா எடுத்த முயற்சிகளின் எதிரொலியாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஐரோப்பிய கண்டத்திற்கான கச்சா எண்ணெய் விற்பனை விலையை அந்நிறுவனம் உயத்தாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மே மாத சரக்கு ஏற்றுமத்திக்கான விலையில்தான் இந்த மாற்றத்தை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன்படி கச்சா எண்ணெயின் தரத்தை பொறுத்து பீப்பாய் ஒன்றுக்கு 20 முதல் 50 செண்டுகள் வரை விலையில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. 

தற்போது நாட்டில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சவுதி நிறுவனம் கச்சா எண்ணெய் விற்பனை விலையை உயர்த்தி இருப்பது விலையில் மாற்றத்தை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய கண்டத்திற்கான விலையில் மாற்றத்தை அறிவித்திருந்தது இந்நிறுவனம். அதே நேரத்தில் ஆசிய கண்டத்திற்கான விலையில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தரமேந்திர பிரதான் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையும். சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களே அதற்கு காரணம் என அவர் அண்மையில் சொல்லி இருந்தார்.