வணிகம்

உக்ரைன் போர் தீவிரம்: ரூபாய் மதிப்பு 40 காசுகள் வீழ்ச்சி

Sinekadhara

உக்ரைனில் போர் தீவிரமடையும் நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் சரிந்து ரூ.75.73 ஆக வர்த்தகமாகிறது. வாரத்தின் முதல் வணிக நாளான இன்று சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து 55,098 புள்ளியில் வர்த்தகம் நடைபெறுகிறது. உக்ரைன் போர் தீவிரமடைவதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீரென தங்கள் முதலீடுகளை நிறுத்தியது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.