அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.03 ஆக குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா குறைந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 72.03 ஆக உள்ளது. இதற்கு காரணம் வலுவான அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறுவதே என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியாக நேற்று மட்டும் இந்திய பங்கு சந்தைகளிலிருந்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் வெளியே சென்றது குறிப்பிடத்தக்கது. எனவே டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து காணப்படுவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.