வணிகம்

ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.80,000 கோடி

ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.80,000 கோடி

webteam

ஜனதன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் தொகை 80 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துவிட்டதாக நிதியமைச்சக புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. 

குறைந்தபட்ச கணக்கு இருப்பு தொகை தேவைப்படாத வங்கிக் கணக்குகளே ஜனதன் கணக்குகள் எனப்படுகின்றன. ஏழை, எளிய மக்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட இக்கணக்கில் பணமதிப்பு நீக்கத்தின் போது பெருமளவில் தொகை சேர்ந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கிடையில் கடந்தாண்டு உலகளவில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் 55% இந்தியாவில் மட்டும் தொடங்கப்பட்டிருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது பெருமிதம் தருவதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.