வணிகம்

ரூ.6 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தையில் மாபெரும் சரிவு

ரூ.6 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தையில் மாபெரும் சரிவு

webteam

பங்குச்சந்தை ஒரே நாளில் 440 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் 6 லட்சம் கோடி ரூபாய் தொகை நஷ்டமடைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் சரிந்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மியான்மர் எல்லைக்குள் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்திய தகவல் வெளியானதும் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 440 புள்ளிகள் வீழ்ந்து 31,159 ஆனது. இது கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.