வணிகம்

சேவைக் கட்டணம் ரத்து... ரூ.50 கோடி இழப்பு

சேவைக் கட்டணம் ரத்து... ரூ.50 கோடி இழப்பு

Rasus

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை கட்டணம் ரத்து காரணமாக ஐஆர்சிடிசி-க்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் பயன்படுகிறது. ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐஆர்சிடிசி-க்கு ரூபாய் 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2015-16 ஆம் ஆண்டில், ஐஆர்சிடிசிக்கு புக்கிங் சேவைக் கட்டணம் மூலம் 516 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ஒரு நாளைக்கு 5.75 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.