25 லட்ச ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு டெல்லியில் தமிழ்நாடு அரசு சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நாடு முழுவதும் 100, 150 விற்பனையகங்கள் வைத்து செயல்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இத்தகைய கண்காட்சி அமைக்கப்படும். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் 18 லட்சத்திற்கு கைத்தறி துணிகள் மற்றும் ஆடைகள் விற்பனை ஆகியிருந்த நிலையில் இந்த ஆண்டு 25 லட்ச ரூபாயை இலக்காக நிர்ணயித்து கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அரசு சிறப்பு தள்ளுபடியாக அனைத்து ரக துணிகளுக்கும் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களின் பாரம்பரியமான பருத்தி மற்றும் பட்டு சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... தந்தூரியால் மாணவன் பலி? - உணவகத்திற்கு சீல்
இவைத்தவிர மதுரை மற்றும் தஞ்சாவூர் காட்டன் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் போர்வைகள், சட்டைகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்மக்கள் மட்டுமில்லாமல் வர மாநிலத்தவரும் ஏராளமான அளவில் இந்த கண்காட்சியில் தங்களுக்கு வேண்டிய துணி ரகங்களை வாங்கி செல்ல உள்ளனர்.
இந்த ஆண்டின் இந்த சிறப்பு விற்பனைக்கான கண்காட்சியினை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் திறந்து வைத்தார்.