வணிகம்

2020-21ல் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்: மத்திய அரசு

Veeramani

2020-21 ஆம் நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, 2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் முறையே ரூ.19,564 கோடி மற்றும் ரூ. 5,116 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வி.கே .சிங், “சில விமான நிறுவனங்கள் தங்கள் நிலுவைத் தொகையை வழங்குவதில் தவறிவிட்டன. AAI அதன் கடன் கொள்கையின்படி நிலுவைத் தொகையை திரும்பப் பெறுவதற்காக விமான நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை முறையே ரூ.2,350 கோடி மற்றும் ரூ.185 கோடியை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (ஏஏஐ) செலுத்த வேண்டியுள்ளது. மேலும் அலையன்ஸ் ஏர் ரூ .109 கோடியையும் , கோ ஏர் ரூ .56 கோடியையும் செலுத்த வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.