வணிகம்

ஓணம் திருவிழா: கேரளாவில் ஒரே நாளில் 1000 பைக்குகளை விற்றுத் தீர்த்த ராயல் என்ஃபீல்டு

ஓணம் திருவிழா: கேரளாவில் ஒரே நாளில் 1000 பைக்குகளை விற்றுத் தீர்த்த ராயல் என்ஃபீல்டு

webteam

கேரளாவில் ஓணம் திருவிழாவையொட்டி 1000 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்கப்பட்டுள்ளன.

ஆரம்ப காலங்களில் நமது தாத்தாக்கள் சுற்றி வந்த புல்லட்கள், வாகனத்துறையின் அசுர வளர்ச்சியாலும், புது வாகனங்களின் வரவாலும் அதன் பொலிவை லேசாக இழந்தது. இதனை மாற்றும் விதமாக  ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இக்காலத்து இளைஞர்களை கவரும் வண்ணம் அதில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்டுவந்தது. அந்த மாற்றங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. நீண்ட தூர பயணப் பேச்சு எழுந்தாலே, நீங்கள் ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கிறீர்களா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ள  ராயல் என்ஃபீல்டு நிறுவனம்  கடந்த ஓணம் திருவிழாவையொட்டி, கேரளாவில் 1000 ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விற்றுள்ளது.

இது குறித்து நிறுவனம் கூறும்போது “ கேரளாவில் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு 59 டீலர்களும், 25 ஷோரூம்களும் உள்ளன. Interceptor,Continental GT 650, Himalayan,Classic 350 ஆகிய அனைத்து ரக வாகனங்களும் ஓணம் தினத்தன்று விற்கப்பட்டது. ராயல் என்ஃபீல்டு புதிய மாடலான Royal Enfield Meteor 350 இம்மாத புதுவரவாக வெளியிடப்படலாம்” எனக் கூறியது. விரைவில்  ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கான பிரத்யேக ஆப்பும் வெளியிடப்பட உள்ளதாம்.