வணிகம்

நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழிலில் பெரும் பாதிப்பு - ஏற்றுமதியாளர்கள் கவலை

Veeramani

நூல் விலை உயர்வால் திருப்பூரில் பின்னலாடை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக திருப்பூரில்தான் தயாராகின்றன. ஆனால், அந்தத் தொழிலை முடக்கும் வகையில் பின்னலாடைகளின் மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நூல் விலை 150 ரூபாய் வரை உயர்ந்து சுமார் 350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோன்ற சூழலில் நூலின் மேலும் 30 ரூபாய் அதிகரித்திருப்பது ஏற்றுமதியாளர்களை கவலை அடைய வைத்துள்ளது என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நூற்பாலைகள் முன்வராதது ஏன் என்று ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும், இப்பிரச்னைக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் பின்னலாடை துறை முடங்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சூழலில், ஜவுளித்துறைக்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி.வரியே நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை ஜவுளித்துறையினர் வரவேற்றுள்ளனர்.