வணிகம்

பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க பரிசீலனை

பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க பரிசீலனை

webteam

பங்குச் சந்தைகளில் வர்த்தகத்துக்கான நேரத்தை இரவு 7.30 மணி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரத்துடன் ஓரளவு இணைந்து செயல்படும் வகையில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தக நேரத்தை மாற்றியமைக்க சந்தை நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன. இப்போது மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதை மாலை 5 மணி, 5.30 மணி மற்றும் இரவு 7.30 மணி வரை என பல நேரங்களில் ஏதாவது ஒன்றுக்கு நீட்டிக்க பலமுறை திட்டம் முன்வைக்கப்பட்டது. எனினும், தொழில்நுட்ப மற்றும் ஊழியர்களின் பணி நேர அடிப்படையில் அவ்வப்போது எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. எனினும், பங்கு வர்த்தக நேர மாற்றத்துக்கு செபி ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.