சில்லறை பணவீக்கம்
சில்லறை பணவீக்கம் புதிய தலைமுறை
வணிகம்

இந்தியாவில் 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்த சில்லறை பணவீக்கம்

PT WEB

சென்ற நவம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவே முந்தைய அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.87 சதவிகிதமாக இருந்தது. காய்கறி, தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே சில்லறை பணவீக்கம் அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, நவம்பரில் உணவுப் பணவீக்கம் 6.61 சதவிகிதத்தில் இருந்து 8.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் 5.85 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 5.26 சதவிகிதமாகவும் உள்ளது.

விலைவாசி உயர்வை குறிக்கும் சில்லறை பணவீக்கத்தைக் கொண்டே கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அந்தவகையில், பணவீக்கத்திற்காக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச வரம்பான 6 சதவிகிதத்திற்குள்ளாகவே சில்லறை பணவீக்கம் உள்ளது.

அதிகளவாக ஒடிசாவில் சில்லறை பணவீக்கம் 7.65 சதவிகிதமாகவும், குறைந்த அளவாக டெல்லியில் 3.1 சதவிகிதமாகவும் உள்ளது. பீகார், கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் 6 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.