வணிகம்

பருப்பு ரகங்களை இருப்புவைக்க கட்டுப்பாடு: விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

Veeramani

பருப்பு ரகங்களின் விலை உயர்வு, பதுக்கலை கட்டுப்படுத்த வரும் அக்டோபர் மாதம் வரை அவற்றை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இறக்குமதியாளர்கள், அரவை உரிமையாளர்கள், மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த வணிகர்கள் 200 டன்கள் வரையும் சில்லறை வணிகர்கள் 5 டன் வரையுமே பருப்புகளை இருப்பு வைக்க அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாட்டில் பாசிப் பருப்புக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.