வணிகம்

இந்தியா: முக்கிய நகரங்களில் அலுவலக இடப்பயன்பாடு 25% அதிகரிப்பு

இந்தியா: முக்கிய நகரங்களில் அலுவலக இடப்பயன்பாடு 25% அதிகரிப்பு

நிவேதா ஜெகராஜா

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், அலுவலக இடப்பயன்பாடு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், புனே, பெங்களுரு, சென்னை உள்ளிட்ட ஏழு நகரங்களில் அலுவலக இடப்பயன்பாடு விரிவடைந்துள்ளது. புனேவில் அதிகபட்சமாக 3.6 மில்லியன் சதுர அடி அலுவலக இடப்பயன்பாடு அதிகரித்துள்ளது. அடுத்ததாக பெங்களுருவில் 2.5 மில்லியன் சதுர அடி அளவுக்கும், சென்னையில் 2.2 மில்லியன் சதுர அடி அளவுக்கும் அலுவலக இடப்பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஐடி ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றிய சூழலில், தற்போது மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துக்கு அலுவலகங்கள் திரும்பத் தொடங்கியுள்ளதால் அலுவலக இடத் தேவை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக புனே, பெங்களுரு, சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துவதும் இதற்கு காரணம் என்கிறார்கள் ஐடி துறையினர். மாறாக மும்பையில் அலுவலக பயன்பாட்டு இடங்கள் அதிகரித்தபோதும், ஐடி நிறுவனங்கள் புனே மீது கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.