புத்தாண்டு சலுகையாக 199 ரூபாய்க்கு தினமும் 1.2 ஜிபி அளவு 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் புதிய கட்டணப்பட்டியல் இன்று முதல் அமலுக்கு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு புது வருட சலுகையாக 199 ரூபாய்க்கு தினமும் 1.2 ஜிபி டேட்டாவும், 299 ரூபாய்க்கு தினமும் 2 ஜிபி டேட்டாவும் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா என்ற திட்டத்திற்கு 309 ரூபாய் கட்டணமாக இருந்தது.