வணிகம்

வாவ்: ஜியோவுக்கு 13 கோடி வாடிக்கையாளர்கள்

வாவ்: ஜியோவுக்கு 13 கோடி வாடிக்கையாளர்கள்

webteam

வெளிவந்த ஓராண்டிலே தொலைத்தொடர்பு துறையில் தடம் பதித்த ஜியோ மாபெரும் புரட்சி செய்துள்ளது. 

ஜியோவுடன் போட்டிப்போட முடியாத வோடாஃபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் புதிய ஆஃபர்களை அறிவித்தும் மந்த நிலையிலே உள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கிய ஜியோ 4ஜி சேவையை தொடங்கி முதல் வருட நிறைவில் 130 மில்லியன் அதாவது 13 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக முகேஸ் அம்பானி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஜியோவின் புரட்சி இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். டிராய் நிலவரப்படி ஜியோ தற்போது 13 கோடி வாடிக்கையாளர்களை எட்டியிருப்பதாக அம்பானி குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் மொபைல் டேட்டா பயன்பாட்டில் 155 வது இடத்திலிருந்த இந்தியா, ஜியோவின் வருகைக்கு பின் உலகின் முதல் இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ, 4ஜி இலவச சேவையை தொடங்கி அதன்பின் சலுகை விலையில் டேட்டா, மலிவு விலை செல்போன் என பல்வேறு துறைகளில் கால்பதித்தது. விரைவில் பிராட்பேண்ட், ஃபைபர் கேபிள் சேவையை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.