வணிகம்

தமிழ்நாடு: பதிவுத்துறையின் வருவாய் நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை அதிகரிப்பு

Veeramani

பேரிடர் ஏதும் இல்லாத காலத்தில் பெறப்பட்ட வருவாயைவிட நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை தமிழக பதிவுத்துறையின் வருவாய் அதிகரித்துள்ளது.

அதாவது நடப்பு நிதியாண்டில் 10,785 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் ஜனவரி வரை 7,927 கோடி ரூபாயும், அதற்கு முந்தைய ஆண்டில் 9,145 கோடி ரூபாயும், 2018-19 நிதியாண்டில் ஜனவரி வரை 8,937 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல், பதிவு செய்த அன்றே ஆவணங்களை விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் ஆகியன பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.