ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இத்தகவலை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சட்ட ரீதியாகவும் விதிமுறைகள் ரீதியாகவும் ஏற்பட்ட சிக்கல்களே இணைப்பு நடவடிக்கை கைவிடப்பட காரணம் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் நிலவி வரும் கடும் போட்டியும், இணைப்பு முடிவை கைவிட காரணம் என அனில் அம்பானியின் நிறுவனம் தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களின் இலவச அழைப்பு, அளவற்ற டேட்டா சலுகை போன்ற காரணங்களால் 2ஜி மற்று்ம 3ஜி சேவை பிரிவுகளில் லாப அளவு வெகுவாக குறைத்துவிட்டதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.