வணிகம்

வட்டி விகிதத்தை‌ குறைக்குமா ரிசர்வ் வங்கி?

வட்டி விகிதத்தை‌ குறைக்குமா ரிசர்வ் வங்கி?

webteam

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி‌யின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார். அப்போது மும்பையில் நடைபெற்ற முதல் நிதிக்கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெப்போ) ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு 6.25 சதவீதமாக குறைத்தது. 

பின்னர்  2 மாதங்களில் மீண்டும் கால் சதவிகிதம் குறைத்து ‌6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் சில்லறை பணவீக்கம் குறைந்து வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் அனைத்தும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை வரும் 6ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்காக ரிசர்வ்‌ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி மீண்டும் மூன்றாவது முறையாக வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.