வணிகம்

“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்

EllusamyKarthik

எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைத்து எடுக்க வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ். பாம்பே வர்த்தக சபையின் 185வது பவுண்டேஷன் தின கூட்டத்தில் பேசியபோது இதை அவர் தெரிவித்திருந்தார். 

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதை எதிர்த்து சாமானிய மக்களும், எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் இதை தெரிவித்துள்ளார். 

“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைத்து எடுக்க வேண்டிய தேவை உள்ளது. இரண்டு அரசுகளும் நிலையான சில வரிகளை வசூலித்து வருவது அதற்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.