வணிகம்

ரூ.3.8 லட்சம் கோடி வராக் கடன் பிரச்னை; வங்கிகளுக்கான கெடு இன்று நிறைவு

ரூ.3.8 லட்சம் கோடி வராக் கடன் பிரச்னை; வங்கிகளுக்கான கெடு இன்று நிறைவு

webteam

3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்திருந்த கெடு இன்றோடு நிறைவடைகிறது.

வராக் கடன் பிரச்னைகளுக்கு இறுதித் தீர்வு ஏற்படுத்தும் பணியில் வங்கி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் 70 கணக்குகள் மூலமாக தரப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப வராமல் உள்ளது. இந்த பணத்தை வசூலிப்பதற்கான தீர்வை 6 மாதத்திற்குள் ஏற்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. 

கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய கெடு காலம் இன்றோடு முடிகிறது. கடன்களை திரும்ப வசூலிப்பதற்கான தீர்வுகளை வங்கிகள் அறிவிக்காத பட்சத்தில் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் குறிப்பிட்ட கடன்களை வாங்கிய நிறுவனங்களை திவால் நிறுவனங்களாக அறிவித்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கும். வங்கிகளுக்கு மிகப்பெரிய தொகையை திரும்ப செலுத்தாத நிறுவனங்களில் மின்துறை நிறுவனங்களே அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது