டிமார்ட் நிறுவனத்தின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தமானி, உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார். புளூம்பெர்க் பில்லினியர் இண்டெக்ஸ் படி, இவர் 98-ம் இடத்தில் இருக்கிறார். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 19.2 பில்லியன் டாலர். கடந்த ஆண்டு 117-வது இடத்தில் இருந்தார். அப்போது அவரின் சொத்து மதிப்பு 16.5 பில்லியன் டாலராக இருந்தது.
முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, அஸிம் பிரேம்ஜி, பலோன்ஜி மிஸ்திரி, ஷிவ் நாடார் மற்றும் லஷ்மி மிட்டல் ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.
மும்பையில் சிறு குடும்பத்தில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் படித்துக்கொண்டிருக்கும்போது அப்பா இறந்துவிட்டதால் படிப்பை பாதியில் விட்டார். அதன்பிறகு பங்குச்சந்தை சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்தார். பால் பேரிங்க் தொழிலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பங்குச்சந்தை முதலீட்டிலும் இறங்கினார்.
2000-ம் ஆண்டு டிமார்ட் என்னும் ரீடெய்ல் ஸ்டோரை தொடங்கினார். அடுத்த பத்தாண்டுகளில் 25 ஸ்டோர்கள் திறந்தார். இந்த நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிட்டார். 2021-ம் ஆண்டு மட்டும் டிமார்ட் பங்கு 32 சதவீதம் உயரந்திருக்கிறது. இது தவிர இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 12.7 சதவீத பங்குகள் தமானி வசம் உள்ளது.