வணிகம்

சற்றே குறைந்த விலை... இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Veeramani

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 51 ரூபாய் விலை குறைந்து 5 ஆயிரத்து 20 ரூபாய்க்கும், ஒரு சவரன் 408 ரூபாய் விலை இறங்கி 40 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 10 காசுகள் விலை குறைந்து 74 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகிறது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிராமிற்கு சுமார் 500 ரூபாய் வரை அதிகரித்தது. அதேபோல வெள்ளியின் விலையும் கிராமிற்கு 5 ரூபாய் வரை அதிகரித்தது.