வணிகம்

இன்றும் பெட்ரோல் விலை உயர்வு: கலக்கத்தில் நடுத்தரவாசிகள்..!

Rasus

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 5 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 15 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த பத்து நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 30 காசுகளும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 72 காசுகளும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் பெட்ரோலுக்கான கலால் வரியை குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.