வணிகம்

தமிழகத்திலும் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை!

தமிழகத்திலும் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை!

sharpana

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது. பெட்ரோல் விலை ஒரு மாத காலத்தில் லிட்டருக்கு மூன்று ரூபாய் 53 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 96 ரூபாய் 23 காசுகளாக இருக்கிறது. இதே போல் டீசல் விலையும் ஒரு மாதத்தில் நான்கு ரூபாய் 3 காசுகள் உயர்ந்து தற்போது லிட்டர் 90 ரூபாய் 38 காசுகளுக்கு விற்பனையாகிறது.

சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்கிற நடைமுறை அமலுக்கு வந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.டீசல் விலை லிட்டருக்கு 34 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.