வணிகம்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு - நிலவரம் என்ன?

JustinDurai

பெட்ரோல், டீசல் விலை கடந்த 16 நாட்களில் 14ஆவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரிக்கப்பட்டு 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 100 ரூபாய் 94 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

பெட்ரோல் விலை 16 நாட்களில் லிட்டருக்கு 9 ரூபாய் 45 காசுகளும் டீசல் 9 ரூபாய் 51 காசுகளும் அதிகரித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக உற்பத்திச் செலவுகளும் சரக்குப்போக்குவரத்து செலவுகளும் அதிகரித்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்றே குறைந்து 105.9 டாலராக இருந்தது

இதையும் படிக்க:  ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்! - வாசகர்கள் கமெண்ட்ஸ்