வணிகம்

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் திடீர் பணக் கட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி

Sinekadhara

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எதிரொலியால் பெரம்பலூர் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

லக்ஷ்மி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியை சந்தித்தை அடுத்து அந்த வங்கியில் எத்தணை கணக்குகள் வைத்திருந்தாலும் டிசம்பர் 16 வரை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் திருமண செலவுகள் இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்பித்து, 5 லட்ச ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால் அதனை கழித்த பிறகே பணம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளின் எதிரொலியாக பெரம்பலூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் இன்று பணம் எடுக்கவோ செலுத்தவோ முடியாத சூழல் நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரத் தேவைக்காக பிற வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பமுடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனிடையே லட்சுமி விலாஸ் வங்கியின் ATM செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு சாப்ட்வேர் அப்டேட் செய்வதால் இன்று பண பரிவர்த்தனை கிடையாது என கூறியதாகத் தெரிகிறது.