வணிகம்

மருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம் 

மருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம் 

webteam

மருத்துவ வசதிகளுக்கு என்று தனியாக ஒரு அப்பை வடிவமைக்க பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் முக்கிய செயலியாக இருப்பது பேடிஎம். இந்தச் செயலியில் அதிகளவில் மக்கள் தங்களின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். இந்தச் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் ரீசார்ஜ், மின்சார ரசீது, டிடிஎச் கட்டணம் முதலிய பல பணி வர்த்தனை செய்ய முடியும். ஆகவே இது மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பேடிஎம் தற்போது மருத்துவ வசதிகளுக்கு என்று தனியாக ஒரு புதிய செயலியை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி மருத்துவர்களுக்கு நோயாளிகள் செலுத்தும் கட்டணம் இந்தப் புதிய செயலி மூலம் செய்ய வழிவகை செய்யப்படும். அத்துடன் மருத்துவர்களிடன் நோயாளிகள் முன் பதிவு செய்ய வசதியும் இந்தச் செயலியில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் தங்களின் மருத்துவமனைக்கு வாங்கும் மருந்துகளுக்கு இச் செயலி மூலம் பணம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே பேடிஎம் நிறுவனம் கல்வித்துறையில் கட்டணம் செலுத்தும் வசதியை அறிவித்துள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தச் சூழலில் பேடிஎம் தற்போது மருத்துவ துறையில் இறங்கவுள்ளது. ஒரு மாததிற்கு பேடிஎம் செயலியில் 800-900 மில்லியன் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.