வணிகம்

மானிய விலையில் தனியார் சிலிண்டர் விற்பனை - ஆராய குழு

Rasus

தனியார் நிறுவனங்கள் மானிய விலையில் சிலிண்டர் விற்பனை செய்வதை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு சார்பில் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு மட்டும் மானிய விலை உண்டு. மானியங்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால் தனியார் நிறுவனங்கள் மானிய விலையில் சிலிண்டர்களை விற்பனை செய்ய அனுமதியில்லை.

இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் மானிய விலையில் சிலிண்டர் விற்பனை செய்வதை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆராய குழு
அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மானிய விலை சிலிண்டர் விற்பனைக்கு தொடர்ச்சியாக அனுமதி கோரிய நிலையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணரான கிரிட் பரிக் உள்ளிட்ட 5 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு ஜூலை இறுதியில் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.

உலக அளவில் சிலிண்டர்களை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. கடந்த 2018-19-ஆம் ஆண்டில் மட்டும் 24.9
மில்லியன் மெட்ரிக் டன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பாதி இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.