வணிகம்

ஆதாருடன் 14 கோடி பான் எண்கள் இணைப்பு

ஆதாருடன் 14 கோடி பான் எண்கள் இணைப்பு

webteam

14 கோடி பான் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய பான் - ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதையடுத்து பான் எண்ணை, ஆதாருடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வழங்கப்பட்டிருந்தது. இப்போது இந்த அவகாசம், மார்ச் 31-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பான் எண்களில் 41 சதவிகிதம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.