வணிகம்

“இதற்கு பெயர் நேர்மை; தந்திரம் அல்ல”- நிர்மலா சீதாராமனுக்கு பி.டி.ஆர்.பி.தியாகராஜன் பதிலடி

webteam

2021-22-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வெளியானது. இதில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வரி லிட்டருக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு இப்போது ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது மாநில அரசுகளின் முடிவு” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பேட்டியை பகிர்ந்து “2016ஆம் ஆண்டு முதல் மற்றும் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களுக்கான இடையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அதிமுக அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு இரண்டு கட்டங்களாக ரூ.7 உயர்த்தியிருந்தது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்து வாதம் செய்தது. தற்போது திமுக அரசு அமைந்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இதற்கு பெயர் நேர்மை. தந்திரம் அல்ல” என பதில் அளித்துள்ளார்.