வணிகம்

"இந்திய பொருள்கள் இறக்குமதிக்கு தடை தொடரும்" - ஒரே நாளில் முடிவை மாற்றிய பாக்.

"இந்திய பொருள்கள் இறக்குமதிக்கு தடை தொடரும்" - ஒரே நாளில் முடிவை மாற்றிய பாக்.

JustinDurai

இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதிக்கு அனுமதி அளிக்கலாம் என பாகிஸ்தான் கூறிய ஒரே நாளில் அதனை நிராகரித்துள்ளது.

உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சுமார் 5 லட்சம் டன் சர்க்கரை மற்றும் பருத்தியையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு குழு அனுமதியளித்ததாக அந்நாட்டு நிதியமைச்சர் ஹமத் அன்சாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தியை இறக்குமதி செய்யும் பொருளாதார ஒருங்கிணைப்பு குழுவின் முடிவு நிராகரிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா மீண்டும் அளித்தால் மட்டுமே அந்நாட்டுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்பதில் இம்ரான் கான் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷைரீன் மசாரி தெரிவித்துள்ளார்.