வணிகம்

ஏப்ரல் 29ல் வெளியாகும் ஓப்போ ‘ஏ92’ - 6 கேமராக்கள்.. 5ஜி நெட்வொர்க்

ஏப்ரல் 29ல் வெளியாகும் ஓப்போ ‘ஏ92’ - 6 கேமராக்கள்.. 5ஜி நெட்வொர்க்

webteam
ஓப்போ நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ஏ92’ மாடலை வெளியிடவுள்ளது.

சீன நிறுவனமான ஓப்போ சர்வதேச சந்தைகளில் நிகழும் ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் குறிப்பிட்ட இடத்தை பிடிக்க அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘ஏ92’ என்ற புதிய மாடலை வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த போன் சீனாவில் மட்டுமே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலோ அல்லது மற்ற நாடுகளிலோ அன்றைய தினமே வெளியாகுமா ? என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை

6.57 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் 5ஜி நெட்வொர்க் ஆப்ஷனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் 4 கேமராக்கள் மற்றும் முன்புறத்தில் 2 கேமராக்கள் என மொத்தம் 6 கேமராக்கள் உள்ளன. பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்) சென்ஸார் கொண்ட மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதன் துணைக் கேமராக்களின் எம்பி-க்கள் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமராவும், அதற்கு 2 எம்பி டெப்த் சென்ஸாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரண்டு ரகங்களில் போன் வெளியிடப்படவுள்ளது. அதற்கு ஏற்றவாறு 6 ஜிபி ரேம் ரகத்தின் விலை ரூ.23,700 எனவும், 8 ஜிபி ரேம் ரகத்தின் விலை ரூ.27,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை மற்றும் கறுப்பு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும் எனப்பட்டுள்ளது.