வணிகம்

வெங்காயம் விலை திடீர் உயர்வு‌

வெங்காயம் விலை திடீர் உயர்வு‌

webteam

திண்டுக்கல் சந்தைக்கு, பெல்லாரி வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் கனமழை பெய்வதன் காரணமாக, பெல்லாரி வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் ‌சந்தைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 20 டன் வரை வெங்காயம் வரத்து இருந்த நிலையில் தற்போது 17 டன் வெங்காயம் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் ஒரு‌கிலோ வெங்காயம் 30 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், வரத்து அதிகரிக்கும் வரை விலை குறைய வாய்ப்பில்லை எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.