வணிகம்

இந்தியாவில் டிவி விற்பனையை தொடங்கியது OnePlus நிறுவனம்: என்ன மாடல்?என்ன விலை?

EllusamyKarthik

சீனாவின் எலக்ட்ரானிக் சாதன உற்பத்தி நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. Y1S மற்றும் Y1S எட்ஜ் என இரண்டு டிவிகளை மலிவான விலையில், தரமான சிறப்பம்சங்களுடன் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. ஆப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டிலும் இந்த டிவி விற்பனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த டிவியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. Y1S 32 இன்ச் டிவி 16,499 ரூபாய்க்கும், Y1S 43 இன்ச் டிவி 26,999 ரூபாய்க்கும், Y1S எட்ஜ் 32 இன்ச் 16,999 ரூபாய்க்கும், Y1S எட்ஜ் 43 இன்ச் டிவி 27,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

HDR10, HDR10+ மற்றும் HLG பார்மெட் டிஸ்பிளே சப்போர்ட்களை கொண்டுள்ளது இந்த டிவி. ஆண்ட்ராய்டு 11 டிவி சாப்ட்வேர், டால்பி ஆடியோ, மிகவும் மெல்லிய டிசைனில் இந்த டிவி வெளிவந்துள்ளது.