வணிகம்

பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலை

EllusamyKarthik

பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் பார்வையிட்டுள்ளார். அடுத்த 12 மாதத்தில் இந்த 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன்மூலம் ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்யவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

சுமார் 330 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு இந்த தொழிற்சாலை நிறுவப்பட உள்ளது. இந்த முயற்சி கைகூடினால் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக கார்களை உருவாக்கவும் ஓலா திட்டமிட்டு வருகிறதாம். 

இந்த திட்டம் கைகூடினால் உலகில் விற்பனையாகும் இ-ஸ்கூட்டர்களில் 15  சதவிகிதம் இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tesla, Nio and Xpeng மாதிரியான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தன் நிறுவனத்தின் ரோல் மாடலாக பார்க்கிறார் பவிஷ்.