இந்தியாவின் மும்பை மாநகரில் அமைந்துள்ளது தேசிய பங்குச் சந்தை. சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறினால் பங்குச் சந்தை வர்த்தகம் முடங்கியுள்ளதாக தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது. ட்விட்டர் மூலமாக இந்த தகவலை NSE உறுதி செய்துள்ளது.
அதனால் அனைத்து செக்மென்ட்டுகளின் வர்த்தகமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. முதலில் F&O மார்க்கெட்டும், அடுத்து சில நிமிடங்களில் கேஷ் மார்க்கெட்டும் முடங்கியுள்ளது.
“தொலைத்தொடர்பு சேவையை அளிக்கும் இரண்டு சர்வீஸ் புரவைடர்களுடன் சேவையை பெற்று வருகிறோம். அதன் இணைப்புகளில் சிக்கல் இருப்பதால் பங்குச் சந்தை வர்த்தகத்தின் சிஸ்டம் தற்போது முடங்கியுள்ளது. சிஸ்டத்தை மீட்டமைக்கும் பணி நடந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த சிக்கல் களையப்படும்” என NSE ட்வீட்டில் தெரிவித்துள்ளது.