பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஒருவர் தனது மருத்துவ செலவுகளுக்காக எந்தவித கெடுபிடியும், சிரமும் இன்றி பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை தொழிலாளர் நலத்துறை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஒருவர் தனது மருத்துவச் செலவுக்காக பணம் பெற வேண்டும் என்றால் முன்னர் பலவிதமான சிரமம் இருந்தது. அவர் வேலைசெய்யும் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதம் மற்றும் மருத்துவச் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின்னரே பிஎஃப் தொகை கிடைக்கும். இந்த நடைமுறையால் பிஎப் பயனாளிகள் சிரமப்பட்டனர். அவசர காலத்திற்காக எடுக்கப்படும் பிஃப் தொகை, தாமதமாக வருவதாக அவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவ செலவுக்காக ஒருவர் தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து தாங்களே அதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து இச்சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து இதுகுறித்து கடிதம் பெறத் தேவையில்லை.
மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து சலுகைகளைப் பெற முன்பு மூன்று படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. இப்போது ஒரே படிவத்தில் பணத்தை கோரி விண்ணப்பிக்க முடியும்.