வணிகம்

வெளியானது நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் : விலை? சிறப்பம்சங்கள் ?

webteam

பேட்டரியை கழட்டக்கூடிய டிசைனுடன் நோக்கியா நிறுவனத்தின் புதிய ‘சி3’ மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

நோக்கியா நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான சி3 மாடலை சீனாவில் வெளியிட்டுள்ளது. நீலம் மற்றும் தங்க நிறத்தில் வெளியாகியுள்ள இந்த போனிற்கு 2 வருடங்கள் வாராண்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.7,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி டிப்ஸ்ளேவுடன் வெளிவந்த இந்த போனின் அதிகபட்ச ரெசொலூஷன் 720*1440 ஆகும். 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மைக்ரோசிப் மூலம் 128 ஜிபி வரை இதன் மெமரியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், 8 எம்பி (மெகா பிக்ஸல்) ரியர் கேமரா உள்ளது. அத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் எல்இடி ஃபிளாஷ் லைட் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கழட்டி மாட்டக்கூடிய வகையில் 3040 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.