வணிகம்

ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?

ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?

webteam

ரூ.2000 நோட்டுகளை தடை செய்யும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய இருநூறு ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதை எப்போது வெளியிடுவது என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் என்று தெரிவித்தார். குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய இருநூறு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக ஜெட்லி தெரிவித்தார்.