வணிகம்

அன்னதானங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு

அன்னதானங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு

webteam

கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்களில் வழங்கப்படும் அன்னதானங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வழிபாட்டுத் தலங்களில், வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு ஜிஎஸ்டி உண்டு என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது உண்மையல்ல, அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. அது போல் மத வழிபாட்டிடங்களில் விற்கப்படும் பிரசாதப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அன்னதானத்திற்கு தேவையான இடுபொருட்களான சர்க்கரை, சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் இப்பொருட்களை பிரசாதத்திற்காக கொள்முதல் செய்வது போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி உண்டு என கூறப்பட்டுள்ளது.