வணிகம்

"வரி விதிப்பது கிரிப்டோகரன்சிக்கான அங்கீகாரம் என அர்த்தமாகாது" - நிர்மலா சீதாராமன்

Sinekadhara

கிரிப்டோகரன்சி பரிமாற்றத்துக்கு வரி விதிப்பது என்பது, அதனை அங்கீகரிப்பதாக அர்த்தமாகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என உரிய ஆலோசனைக்கு பின் முடிவெடுக்கப்படும் எனக் கூறினார். கிரிப்டோகரன்சி பரிமாற்றத்துக்கு வரி விதிப்பது அதனை அங்கீகரிப்பதாக அர்த்தமாகாது என விளக்கமளித்த அவர், வரி விதிப்பது அரசின் உரிமை எனக் கூறினார். கிரிப்டோகரன்சி பரிமாற்றத்துக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும் என கடந்த 1ஆம் தேதி பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.