வணிகம்

16,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி; இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடி

நிவேதா ஜெகராஜா

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. குறிப்பாக தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி முதல் முறையாக 16,000 புள்ளிகளை கடந்திருக்கிறது. எப்.எம்.சி.ஜி, ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் ஏற்றம் அடைந்திருக்கின்றன. சென்செக்ஸும் 53,500 புள்ளிகளை கடந்திருக்கிறது.நிஃப்டி 15000 முதல் 16000 வரை செல்வதற்கு இடைப்பட்ட காலத்தில் மெட்டல் துறைகளின் பங்குகள் வேகமாக உயர்ந்தன.

இதனிடையே, ரூ.7 லட்சம் கோடி சந்தை மதிப்பை முதல் முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்திருக்கிறது. காலாண்டு முடிவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நன்றாக இருப்பதால் கடந்த இரு வாரங்களில் 7 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு உயரந்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 31 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

முதல் இடத்தில் ரிலையன்ஸ் (ரூ.13.38 லட்சம் கோடி) உள்ளது. இரண்டாம் இடத்தில் டிசிஎஸ் (ரூ.12.12 லட்சம் கோடி) மூன்றாம் இடத்தில் ஹெச்.டி.எப்சி வங்கி (ரூ.7.9 லட்சம் கோடி) உள்ளது. நான்காம் இடத்தில் ரூ.7 லட்சம் கோடி சந்தை மதிப்பில் இன்ஃபோசிஸ் உள்ளது.

ஒரு பங்கின் விலையாக ரூ.1,648-ல் வர்த்தமாகி வருகிறது. இது தற்போதைய நிலையில் 52 வார உச்சபட்ச விலையாகும்.