மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த வெளியீடு நாளை தொடங்குகிறது.
ஒரு கிராம் தங்க முதலீட்டிற்கான விலை 2 ஆயிரத்து 780 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 14-ம் தேதி வரை பத்திரங்களுக்கான பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தங்கத்தில் பொருள் வடிவில் முதலீடு செய்வதற்கு பதில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.