ஏப்ரல் 1, 2025 முதல், இந்தியா முழுவதும் புதிய வங்கிச் சட்டம் செயல்படுத்தப்படுவதால் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். பொறுப்பான நடத்தையை ஊக்குவிக்கவும், மோசடியைத் தடுக்கவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் வங்கிகள் தங்களது கொள்கைகளைத் திருத்துகின்றன.
இந்த மாற்றங்கள் ஏடிஎம் பணம் எடுக்கும் கொள்கைகள், சேமிப்புக் கணக்கு விதிகள், கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது வாடிக்கையாளர்களின் தினசரி பயன்பாட்டில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
1. ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதனால், பல வங்கிகள் தங்கள் ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணங்களை திருத்தியுள்ளன. ஒரு மாதத்தில் ஏடிஎம்-ல் இலவசமாக கட்டணம் இன்றி பணம் எடுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது, பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும்போது மதத்திற்கு 3 முறை இலவசமாக எடுக்கலாம். அதன் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 முதல் ரூ.25 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
2. அனைத்து சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்குகளில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகை என்ற வரைமுறையை வைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும். இதுகுறித்து வங்கிகள் ஆலோசனையில் உள்ளதாகவும் மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில் வங்கிகள் இதுகுறித்து அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் அமைந்துள்ள இடத்தை பொறுத்து இது மாறுபடலாம். அதாவது metro, urban, semi-urban, or rural போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வங்கிகளை பொறுத்து இது மாறுபடலாம்.
3. வங்கி மோசடியை தடுக்க ரிசர்வ் வங்கி Positive Pay System முறையை (PPS) செயல்படுத்தும். அதாவது ரூ.50,000 க்கு மேல் காசோலைகளை வழங்கும் வாடிக்கையாளர்கள், பயனாளிகளுக்கு அவர்கள் வழங்கிய காசோலைகள் பற்றிய முக்கிய விவரங்களை மின்னணு முறையில் வங்கிக்கு வழங்க வேண்டும்.
4. டிஜிட்டல் தளங்களில் வங்கிச் சேவையை மேம்படுத்தும் வகையில் AI பயன்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு உதவ வங்கிகள் மேம்பட்ட ஆன்லைன் அம்சங்கள் மற்றும் AI சாட்பாட்களை அறிமுகப்படுத்துகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க two-factor authentication மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும்.
5. பல வங்கிகள் savings accounts மற்றும் fixed deposits வட்டி விகிதங்களை திருத்தி வருகின்றன. எஸ்பிஐ, ஐடிபிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி போன்ற முன்னணி வங்கிகள் வட்டி விகிதங்களுடன் FD Tenure-லும் மாற்றத்தை அறிமுகம் செய்யும்.
6. ஏப்ரல் 1, 2025 முதல், முக்கிய வங்கிகள் கிரெடிட் கார்டு விதிகளை திருத்தி வருகின்றன. இது rewards, கட்டணங்கள் போன்ற பலவற்றை பாதிக்கும். SBI SimplyCLICK Swiggy வெகுமதிகளை 5X ஆக பாதியாகக் குறைத்தும், Air India Signature புள்ளிகளை 30-லிருந்து 10 ஆகக் குறைத்தும் அமல்படுத்தும். IDFC First, Club Vistara மைல்ஸ்டோனின் பயன்களை நிறுத்தும்.
7. ஏப்ரல் 1 முதல், நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத UPI கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் வங்கிப் பதிவுகளிலிருந்து நீக்கப்படும். உங்கள் தொலைபேசி எண் UPI செயலியுடன் இணைக்கப்பட்டு நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாவிட்டால், வங்கிகள் அதை தங்கள் பதிவுகளிலிருந்து நீக்கிவிடும், மேலும் கணக்கிற்கான UPI சேவைகள் இடைநிறுத்தப்படும்.
மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் அனைத்தும் மக்களின் அன்றாட நிதி சார்ந்த பயன்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாக உள்ளது.