வணிகம்

இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை

இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை

webteam

இந்தியாவிலேயே பணக்கார நகரமாக மும்பை திகழ்வதாக நியூ வேர்ல்டு வெல்த் என்ற நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

மும்பையில் 46 ஆயிரம் மில்லியனர்களும், 28 பில்லியனர்களும் இருப்பதாக அதன் ஆய்வு தெரிவிக்கிறது. இந்நகரத்திலுள்ளோரின் மொத்த சொத்து மதிப்பு 56 லட்சம் கோடி ரூபாய் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மும்பையை தொடர்ந்து டெல்லி, பெங்களூரு ஆகியவை இந்தியாவின் பணக்கார நகரங்களாக உள்ளதாக அந்த ஆய்வு கூறியுள்ளது. இப்பட்டியலில் சென்னை 7-வது இடத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.