வணிகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்

jagadeesh

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது.

இன்று வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்ந்து 40,344 என்ற இதுவரை இல்லாத அளவைத் தொட்டது. அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைத்ததையடுத்து இந்திய பங்குச் சந்தைகளுக்கு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருப்பதே பங்குச் சந்தைகள் அதிகரித்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ்,‌ஐடிசி, சன் பாஃர்மா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவைகளின் பங்குகள் சுமார் இரண்டரை சதவிகிதம் வரை அதிகரித்தது. இதற்கிடையில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசு உயர்ந்து 70 ரூபாய் 81 காசானது.