ஜி.எஸ்.டி குறித்து சந்தேகங்களை கேட்க கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக எண்ணுக்கு ஒரு நாளுக்கு 10,000 கால் வருவதாக ஜி.எஸ்.டி நெட்வொர்க் சேர்மன் நவீன் குமார் கூறியுள்ளார்.
ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்த பின்பு, ஜி.எஸ்.டி குறித்த நடைமுறைகளைப் பின்பற்றவும், சந்தேகங்களைத் தீர்க்கவும் ஜி.எஸ்.டி.என் (ஜி.எஸ்.டி நெட்வொர்க்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சந்தேகங்களைத் தீர்க்க 01204888999 மற்றும் 18001036751 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டன. இந்த எண்ணுக்கு வியாபாரிகள், வரி செலுத்துபவர்கள், தனி நபர்கள், வணிகர்கள், பெரு நிறுவனங்களின் தணிக்கை குழுவினர், ஆடிட்டர்கள் என பல துறையைச் சேர்ந்தவர்களும் அழைத்துப் பேசி வருகின்றனர். நொய்டாவில் இதற்காக ஒரு பிரத்யேக அலுவலகம் அமைத்து 400 கால்செண்டர் பணியாளர்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்த்து வருகின்றனர். ஜி.எஸ்.டி.என் மையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 கால்கள் வருகின்றன என்று அவ்வமைப்பின் தலைவர் நவீன் குமார் கூறியுள்ளார்.